வெளிநாட்டு கோடீஸ்வரர் என நம்பிய நடிகை!... விசாரணையில் பொலிசார் வெளியிட்ட பகீர் தகவல்கள்

Report Print Fathima Fathima in இந்தியா

பெரிய கோடீஸ்வரர் என்ற போர்வையில் நடிகை பூர்ணாவை கடத்த திட்டமிட்டதாக பொலிசார் மேலும் பல அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் தான் கோடீஸ்வரர் எனக் கூறிக் கொண்டு நடிகை பூர்ணாவை திருமணம் செய்து கொள்வதாக நாடகமிட்ட மோசடி கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மொத்தமாக 12 பேர் இதில் பங்கெடுத்த நிலையில், தலைமறைவான நால்வரை பொலிசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பொலிஸ் கமிஷனரான விஜய் கூறுகையில், முதலில் நடிகையை தங்க கடத்தில் ஈடுபடக் கூறியே தொடர்பு கொண்டுள்ளனர்.

அதற்கு அவர் மறுத்ததும் பெண் கேட்பது போன்று நாடகமாடியுள்ளனர், இதற்காக ஹாரிஸ், ரபீக் மற்றும் ஷெரீப் போன்றோர் போனில் வசியம் செய்வது போன்று பேசி நடித்துள்ளனர்.

அத்துடன் பூர்ணாவை கடத்தி அறையில் அடைத்துவைத்து பணம் கேட்டு மிரட்டவும் திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணையில், பூர்ணா மட்டுமின்றி கேரள திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்கள், பிரபலமான மொடல்களிடமும் பணம் பறித்திருப்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது வளைகுடா நாடுகளிடமிருந்து தங்கத்தை கடத்தி கொண்டுவரும் மொடல்களை பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஏமாந்த மொடல்கள் மற்றும் பிரபலங்களின் தகவல்களை திரட்டியுள்ள பொலிசார் மேலதிக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்