ஆண் நண்பர் குறித்து வந்த தகவலால் அதிர்ச்சியில் இரவு முழுவதும் அழுத இளம்பெண்! காலையில் தோழிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் தனது நெருங்கிய நண்பர் தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சஹில்குமார் (32). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிநுட்ப பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

அதே நிறுவனத்தில் பணிபுரியும் பிராக்யா (26) என்ற இளம்பெண்ணும் சஹில்குமாரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.

இந்நிலையில் நேற்று முன் தினம் சஹில்குமார் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவல் விடுதியில் தங்கியிருந்த பிராக்யாவுக்கு தெரியவந்த நிலையில் அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதை தனது அறையில் இருந்த தோழியிடம் சொல்லி இரவு முழுவதும் அழுது வந்தார் பிராக்யா, அவருக்கு தோழி ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு பிராக்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது தூங்கி எழுந்த அவர் தோழி, பிராக்யா தூக்கில் தொங்குவதை பார்த்து அலறி துடித்தார்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து பிராக்யாவின் உடலை கைப்பற்றினார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்