சசிகலா வெளியில் வரும் நேரத்தில் எடப்பாடி பதவிக்கு வந்த ஆபத்து! ஓ.பி.எஸ் வைத்த செக்: ஆட்டம் காணும் முதல்வர்

Report Print Santhan in இந்தியா

சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா அடுத்த மாதம் வெளியில் வருவார் என்று கூறப்படும் நிலையில், சாத்தான்குளம் சம்பவம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்டம் காண வைத்துள்ளது.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான, சசிகலா சொத்து குவிப்பு வழக்கு காரணமாக, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் அடுத்த மாதம் சிறையில் இருந்து வெளியில் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு புறம் அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகின்றன.

சசிகலா, சிறை செல்வதற்கு முன்னர் ஓ.பி.எஸ். கட்சி தலைமைக்கு எதிராக போர்கொடி தூக்கிய காரணத்தால், ஈ.பி.எஸ்.யை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து விட்டு சசிகலா சென்றார்.

ஆனால், ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆகிய இருவரும் இணைந்து சசிகலா குடும்பத்தையே ஓரங்கட்டி விட்டனர். இருப்பினும் சசிகலாவின் விஸ்வாசிகள் அதிமுகவில் ஏராளம்.

இதனால், அவர் வெளியே வந்தால் தமிழக அரசியல் களத்தில் பல திருப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான், நாட்டை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் அரங்கேறியுள்ளது. காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தந்தை, மகன் ஆகிய இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர் என்று பிரேதப்பரிசோதனை அறிக்கை வரும் முன்னரே தெரிவித்தார்.

இது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பொலிசாரை காப்பாற்றும் நோக்கத்தில் முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணை நடக்கும் முன்பே இருவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்கள் எனப் பொய்யான தகவலை முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

குற்றவாளிகளைப் பாதுகாக்கும் செயலாகவே இதனை கருத வேண்டும். இந்த கொலைக்கு முதல்வருக்குத் தொடர்பு உள்ளதா என விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி முதல்வர் கவனிக்கும் துறையின் கீழ் வருகிறது என்பதால், வழக்கு விசாரணை திசை மாறாமல் இருக்க நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டால் பிரச்சினை இல்லை. ஆனால், இதனை விசாரிக்கும் பட்சத்தில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு பிரச்சனை என்றே கூறப்படுகிறது.

இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டாலே முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார்.

இது கொலை வழக்கு என்பதால் அனைத்து பக்கத்திலும் அவருக்கு நெருக்கடி அதிகமாகும் வாய்ப்புள்ளது. எனவே, அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். முதல்வராகும் நிலை ஏற்படும்.

இந்த சூழலில் முதல்வர் எடப்பாடிக்கு கிடைத்திருப்பதாக சொல்லப்படும் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் இந்த வழக்கை தொடுத்திருப்பதன் பிண்ணனியில் இருப்பது ஓ.பி.எஸ். தரப்பு தான் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே கட்சியில் போதிய அங்கீகாரம் இல்லாமல் அமைதியாக வலம் வரும் ஓ.பி.எஸ். தனது டெல்லி தொடர்புகள் மூலம் இதனை செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் கிடைத்துள்ளது.

எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு வரவிடாமல் தள்ளுபடி செய்யும் பொருட்டு சட்ட வல்லுநர்களுடனுன் முதல்வர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தான் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் பேசியுள்ளார் முதல்வர் பழனிசாமி.

அப்போது சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதேபோல், சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கை தாமாக முன் வந்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்