சசிகலாவின் கையில் அமைச்சர்களின் சீக்ரெட்! வெளியில் வருவதற்குள்... அனைத்தையும் முடிக்க கூடிய ஐவர் குழு

Report Print Santhan in இந்தியா

சொத்து குவிப்பு வழக்கால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகல விடுதலையாகவுள்ளதால், அதிமுகவில் சில புள்ளிகள் கடும் பீதியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மீது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகர் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை சாலையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களது தண்டனை காலம் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே சசிகலா விடுதலையாக இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் சசிகலா வருகையால் அதிமுகவில் பல மாற்றங்கள் வரும் என எதிர்ப்பார்த்ததை போல தற்போது முதலே மற்றங்கள் வர துவங்கியுள்ளது.

ஆம், நேற்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் திடீர் ஆலோசனையில் ஈடுப்பட்டனர்.

சுமார் 4 மணி நேரம் நீடித்த அந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவில் கட்சி நிர்வாக ரீதியாக மாவட்டங்களைப் பிரிப்பது, புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏனெனில், அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. சசிகலா வெளியான 6 மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதனால் சிறைக்குள் இருந்தபடியே தேர்தல் வியூகத்தை சசிகலா வகுத்து வருகிறார். அவரது வியூகத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் பணியை டிடிவி தினகரன் மேற்கொண்டு வருகிறார்.

சிறையில் இருந்து வெளியே வந்த உடன் தனது அதிமுக தொடர்புகளை முதலில் புதுப்பிப்பது தான் சசிகலாவின் வியூகமாம்.

தற்போது அமைச்சர்களாக உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு சீக்ரெட் உண்டு. அது என்ன என்பது சசிகலாவிற்கு அத்துப்படி.

அந்த சீக்ரெட்டுகளை எல்லாம் வைத்து தான் ஜெயலலிதா இருக்கும் போதே அமைச்சர்களை ஆட்டிப்படைத்து வந்தார் சசிகலா.

கடந்த காலங்களில் சசிகலா குறித்து கடுமையாக விமர்சித்து வந்த அமைச்சர்கள் தற்போது சசிகலா எனும் பெயரை கூறினால் கையெடுத்து கும்பிட்டு ஓடுகின்றனர் என்றே கூறலாம்.

அமைச்சர் உதயகுமாரிடம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதை பற்றி கேட்ட போது எந்த பதிலும் கூறாமல் கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றார்.

இதே போல் சசிகலாவிற்கு எதிராக வெளிப்படையாக பேசிய சில அமைச்சர்களில் ஒருவர் கே.சி.வீரமணி. சசிகலாவால் தான் ஜெயலலிதா உயிரிழந்தார் என்கிற அளவிற்கு கே.சி.வீரமணி பேசி வந்தார். ஆனால் இப்போது சசிகலா பற்றி கேள்வி கேட்டால் அவரும் கையெடுத்து கும்பிட்டுவிட்டு செல்கிறார்.

இதற்கெல்லாம் காரணம் சசிகலாவிடம் இருக்கும் அமைச்சர்களின் சீக்ரெட் தான் என்கிறார்கள். ஆட்சி இருப்பதன் காரணமாக அதிமுக-வில் சில நிர்வாகிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தல் என்று வந்துவிட்டால், ஓபிஎஸ், ஈபிஎஸ் குழு தாங்குமா என்பதில் சில அமைச்சர்களுக்கு சந்தேகம் இருப்பதால், அவர்களை எல்லாம் இழுக்க சசிகலா வியூகம் வகுத்துள்ளாராம்.

மேலும் தற்போது கூடிய இந்த ஐவர் குழுவில், யார் சசிகலாவை தொடர்பு கொண்டு பேசுவார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிமுக முடிவு செய்துள்ளதால், அப்படி அவர்கள் கேட்கவில்லை என்றால் அவர்களிடம் இருக்கும் பதவியை பறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

அதுமட்டுமா எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் சிலருக்கு முக்கிய பதவிகளை கொடுக்க ஒரு பட்டியலே தயாராகிவுள்ளதாம்.

இதனால் சசிகலா வெளியில் வருவதற்கு எப்படியாவது இவர்களை நம் கைக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி படாத பாடு படுகிறார் என்று சில அரசியல் விமர்சிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்