திருமணமான 7 நாளில் புதுப்பெண்ணுக்கு இரவில் வந்த போன் அழைப்பு! வெளியில் சென்ற நிலையில் குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா
1814Shares

இந்தியாவில் திருமணமான 7 நாளில் புதுப்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கதாலி கிராமத்தை சேர்ந்தவர் ருச்சி (27). இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் கடந்த மாதம் 28ஆம் திகதி திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை அதே ஊரில் இருந்த பண்ணையில் ருச்சி இரத்த வெள்ளத்தில் கழுத்து அறுப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ருச்சியும், சோஹன்வீர் என்ற இளைஞரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

ஆனால் குடும்பத்தார் பார்த்த மாப்பிள்ளையை ருச்சி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் ருச்சி மீது ஆத்திரத்தில் இருந்த சோஹன்வீர் அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து ஞாயிறு இரவு 9 மணிக்கு ருச்சிக்கு ஒரு போன் வந்தது, இதையடுத்து இதோ வந்துவிடுகிறேன் என கணவர் மற்றும் வீட்டாரிடம் கூறிவிட்டு ருச்சி வெளியில் சென்றார்.

ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை, இதையடுத்து அவரை இரவு முழுவதும் குடும்பத்தார் தேடினார்கள்.

இந்த நிலையில் அடுத்தநாளான திங்கள் அன்று பண்ணையில் சடலமாக ருச்சி கண்டெடுக்கப்பட்டார். அவரை அந்த கோலத்தில் பார்த்த கணவர் மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சோஹன்வீரை பொலிசார் கைது செய்துள்ளனர், ருச்சியை போன் செய்து அழைத்த அவர் கூரான ஆயுதத்தை கொண்டு ருச்சி கழுத்தை அறுத்து கொன்றது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்