8 பொலிசாரை துடி துடிக்க கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி என்கவுண்டரில் கொலை! நடந்தது என்ன?

Report Print Basu in இந்தியா

8 பொலிசாரை துடி துடிக்க கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபே தப்பிக்க முயன்றபோது உத்தரபிரதேச எஸ்.டி.எஃப் குழு நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.

கான்பூரை அடைந்ததும் தப்பிக்க முயன்றபோது விகாஸ் துபே மற்றும் உத்தரபிரதேச எஸ்.டி.எஃப் குழு இடையே மோதல் வெடித்தது.

பொலிஸ் நடத்திய என்கவுண்டரில் பாதிக்கப்பட்டு காயமடைந்த விகாஸ் துபே இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கான்பூர் என்கவுன்டர் வழக்கில் பதுங்கியிருந்து 8 காவல்துறையினர் கொல்லப்பட்டதில் விகாஸ் துபே முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவர்.

வியாழக்கிழமை மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைனிலிருந்து கைது செய்யப்பட்ட விகாஸ் துபே, மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனிலிருந்து கான்பூரை வெள்ளிக்கிழமை காலை அடைந்தார்.

உத்தரபிரதேச எஸ்.டி.எஃப் குழு கான்பூரை அடைந்தபோது, உஜ்ஜைனிலிருந்து கான்பூருக்கு விகாஸ் துபே கொண்டு சென்ற பொலிஸ் வாகனம் கான்பூரில் உள்ள பார்ரா பகுதியில் விபத்தை சந்தித்தது.

விபத்தை சாதகமாகப் பயன்படுத்தி, விகாஸ் துபே வாகனத்திலிருந்து இறங்கி, காவல்துறையினரிடமிருந்து ஒரு துப்பாக்கியைப் பறித்து தப்பி ஓட முயன்றார்.

விகாஸ் துபே சரணடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். அவர் அவ்வாறு செய்யவில்லை மற்றும் பொலிஸை நோக்கி சுட்டுள்ளார்.

பதிலடி கொடுக்கும் வகையில் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன்ர், இதில் விகாஸ் துபே காயமடைந்துள்ளார்.

காயங்களுடன் கான்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

விகாஸ் துபேயின் உடல் சம்பவ இடத்திலிருந்து கான்பூரில் உள்ள லாலா லஜ்பத் ராய் மருத்துவமனை அல்லது ஹாலெட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு பொலிசாரும் மருத்துவர்கள் குழுவும் உள்ளனர்.

இச்சம்பவத்திர் நான்கு பொலிசார் காயமடைந்ததாக உத்தரபிரதேச காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்