பிரிட்டிஷ் கால பங்களாவில் பதுங்கியிருக்கும் ஸ்வப்னா? அந்த சொத்து யாருடையது? விசாரணையில் முக்கிய தகவல்

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் தங்க கடத்தல் விவகாரத்தில் சந்தேக நபரான ஸ்வப்னா சுரேஷை பொலிசார் தேடி வரும் நிலையில், அவர் பிர்ட்டிஷ் கால பங்களாவில் இருக்க கூடும் என்ற விசாரணை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவின், திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரக முகவரிக்கு வரும், விமானம் மூலம் வந்த 13 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை கேரள சுங்கத்துறை அதிகாரிகள் சமீபத்தி பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐ.டி. பிரிவின் தற்காலிக ஊழியராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ் சிக்கியிருப்பது கேரள அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி ஸ்வப்னா சுரேஷ் தான் வேலை செய்த இடங்களில் பல்வேறு பிரச்சனை காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளார். அவரின் டிகிரி கூட போலி என்று கூறப்படுகிறது.

இவ்வளவு பெரிய தங்கக்கடத்தலை ஸ்வப்னா பெரிய அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு தான் செய்ததாக செய்தி வெளியானது.

இதனால் இந்த விவகாரம் கேரளாவில் பூதகரமாக வெடித்துள்ளதால், பொலிசார் ஸ்வப்னாவை பிடிப்பதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆனால் ஸ்வப்னா இதுவை எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

இருப்பினும், ஸ்வப்னா, கேரளா தலைநகரிலிருந்து 40 கி.மீற்றர் தூரத்தில் பாலோடே அருகே உள்ள ப்ரீமோர் எஸ்டேட் என்ற பிரிட்டிஷ் கால பங்களாவில் இருக்க கூடும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ஏனெனில் குறித்த திசையில் செல்லும் காரில் வேறொரு பெண்ணுடன், ஸ்வப்னாவை பார்த்ததாக அதிகாரிகளிடம் அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். அப்போது அவர்கள் பாலோட் அருகே மங்காயத்தை அடைவதற்கு எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்டுள்ளனர்.

இதையடுத்து பொலிசார் சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து பார்த்த போது, அந்த நேரத்தில் ஒரு வெள்ளை நிற கார் கடந்து செல்வதை கண்டுபிடித்துள்ளனர்.

இதன் காரணமாக ஸ்வப்னா மங்காயத்தை அடைந்தாரா அல்லது பொன்முடி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள பங்களாவில் இருந்தாரா என்பதை உறுதிபடுத்த முடியவில்லை.

அதே சமயம் விசாரணை அதிகாரிகள், ஸ்வப்னாவின் மகளின் வகுப்பு தோழியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஸ்வப்னாவின் மகள் தங்களுக்கு அழைத்ததாக அவர் கூறியுள்ளார். இதில் பொலிசாருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது

ஸ்வப்னா தனது மகளையும் மகனையும் தன்னுடன் அழைத்துச் சென்றதாகவும், அவர் திருவனந்தபுரத்தை விட்டு வெளியேறவில்லை என்றும் நம்புகின்றனர். ஆனால் அவர் தமிழ்நாட்டிற்குச் சென்றிருக்கலாம் என்ற ஊகங்கள் உள்ளன.

ஸ்வப்னா தான் தலைமறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஒரு வித பயம் தானே, தவிர இதில் நான் குற்றவாளி இல்லை என்று ஆடியோ வெளியிட்டுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்