என்னுடைய திருமணம் மகிழ்ச்சியாக இல்லை! கணவனின் இரக்கமற்ற செயலால் 26 வயது மனைவி எடுத்த விபரீத முடிவு

Report Print Santhan in இந்தியா
2949Shares

இந்தியாவில் கணவரால் கடும் சித்ரவதைக்குள்ளான 26 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வசிக்கும் 26 வயது பெண், தன்னுடைய வீட்டில் கடந்த வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

இவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முக்கிய காரணம், அவர் கணவர் தான் என்று கூறப்படுகிறது. இது குறித்து வெளியான தகவலில், உயிரிழந்த பெண்ணின் பெயர் சோனம் எனவும், அவர் ஜக்வீர் குமார் என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வரும் ஜக்வீர் குமாருக்கு அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இது குறித்து சோனம், தன்னுடைய சகோதரரிடம், என்னுடைய திருமணம் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி மனம் மற்றும் உடல் ரீதியாக கணவரால் கடும் சித்ரவதைக்குள்ளாகியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2014-ஆம் ஆண்டு ஜக்வீர் குமாருக்கு மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது தெரியவந்துள்ளது. இது இருவருக்கும் இடையே பிரச்சனையை அதிகரித்தது.

அதன் பின் குடும்ப உறுப்பினர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டதால், பிரச்சனை சற்று குறைந்துள்ளது. அதன் பின் 2016-ஆம் ஆண்டில் குமார் மற்றொரு பெண்ணுடன் இருக்கும் போது மனைவி சோனமிடம் பிடிபட்டார்.

இருப்பினும் குமார், அவரை மனரீதியாக சித்ரவதை செய்துள்ளார். 2018 ஆம் ஆண்டில், குமார் மற்றும் சோனம் மீண்டும் பிரச்சனை ஏற்பட, அதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் உதவ முயன்றனர்.

குமாரின் குடும்பத்தினர் அவரது புகைப்படங்களை வேறொரு பெண்ணுடன் பார்த்துள்ளனர். ஆனால் அவர்கள் சோனத்திற்கு ஆதரவாக பேசவில்லை. அதுமட்டுமின்றி சோனமின் மைத்துனர்அதே பெண்ணுடன் டிக் டாக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டிருப்பதை அறிந்தார்.

இதற்கிடையில் பொலிஸ் வழக்கில் குமார் சிக்கியதால், அதற்காக தனது மனைவியிடம் அவர் 1 லட்சம் ரூபாய் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவரிடம் போதுமான பணம் இல்லாததால், கடந்த வியாழக்கிழமை இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, சோனம் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக பொலிசார் நேற்று வரை எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்