இராணுவத்தில் இருந்த வீரருக்கு மனைவி இறந்ததாக வந்த தகவல்! பின்னர் ஊருக்கு உடலை பார்க்க வந்த போது ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா
1098Shares

தமிழகத்தில் கொலை செய்யப்பட்ட இராணுவ வீரரின் மனைவி, தாயார் உடல் அழுகியதால் உறவினர்கள் அதிருப்தி அடைந்ததோடு இது தொடர்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

சிவகங்கையின் காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஸ்டீபனின் மனைவி சினேகா, தாயார் ராஜகுமாரி ஆகிய இருவரையும் ஜூலை 14-ம் திகதி கொலை செய்துவிட்டு 75 பவுன் நகைகளை சிலர் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்நிலையில் லடாக்கில் பணிபுரியும் இராணுவ வீரர் ஸ்டீபனுக்கு இது குறித்து தகவல் தரப்பட்ட நிலையில் அவர், இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.

ஸ்டீபன் நேற்று ஊருக்கு வந்ததையடுத்து மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இருவரது உடல்களை எடுத்தபோது அழுகிய நிலையில் இருந்தது.

இதை பார்த்து ஸ்டீபன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர். தொடர்ந்து உடல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். அங்கு கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது ஸ்டீபனின் உறவினர்கள், அரசு மருத்துவமனையில் குளிர்சாதன இயந்திரம் முறையாக இயங்காததால் உடல்கள் அழுகிவிட்டன. இதுகுறித்து முன்கூட்டியே தெரிவித்திருந்தால், நாங்களே குளிர்சாதன இயந்திரத்திற்கு ஏற்பாடு செய்திருப்போம். இராணுவ வீரரின் குடும்பத்திற்கே இந்தநிலையா?,’ என்று மாவட்ட ஆட்சியரிடம் ஆதங்கப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியர் கூறுகையில், உடல்கள் அழுகியது குறித்து விசாரிக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து சினேகா, ராஜகுமாரி உடல்களை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் தலா 2 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்

இதற்கிடையில் இராணுவ வீரரின் மனைவி, தாயார் கொலை வழக்கை விசாரித்து வரும் காளையார்கோவில் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 7 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

இதனால் வழக்கு விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்