சசிகலா தலைமையில் டி.டி.வி மகளுக்கு விரைவில் திருமணம்! யாருடன் தெரியுமா? வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்

Report Print Santhan in இந்தியா
2385Shares

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாகவுள்ள நிலையில், அவர் தலைமையில் திருமணம் நடத்த தினகரன் பரபரப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு சசிகலா, அடுத்த மாதம் விடுதலையாவார் என்று கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றாலும், அவர் வரும் ஜனவரி மாதம் விடுதலையாவது உறுதி.

இந்நிலையில், தான் சிறையில் இருக்கும் சசிகலா காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசி அய்யாவுக்கும், டி.டி.வி தினகரனுக்கும் சம்பந்தம் பேசி முடித்துவிட்டதாகவும், விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக செய்தி வெளியானது.

இதையடுத்து தற்போது அதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் வாண்டையாருக்கும், டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும் நேற்று எளிமையான முறையில் நிச்சயம் நடைபெற்று முடிந்தது.

இவர்களது திருமணம் விரைவில் சசிகலாவின் தலைமையில் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலாவின் ரீஎன்ட்ரிக்கு திருமணம் கைகொடுக்கும் என நெருங்கிய உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சசிகலா சிறையிலிருந்தபடியே தன் உறவுகள் மூலம் இந்த திருமணத்தை பேசி முடித்திருக்கிறார்.

திருமணம் செய்வதை உறுதி செய்யும் விதமாக பெண்ணிற்கு பொட்டு, பூ வைக்கும் நிகழ்ச்சி புதுச்சேரியில் உள்ள டிடிவி தினகரன் பண்ணை வீட்டில் மிக எளிய முறையில் நடைபெற்றது.

திருமணம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த உடன் அவர் தலைமையில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்