அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க... அதான் கொன்னுட்டேன்: பெற்ற மகனின் வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா
1079Shares

தமிழகத்தில் கை, கால்கள் செயலிழந்து தாய் அவதிப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாத மகன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூரை அடுத்த கீவலூர் பகுதியில் வசிப்பவர் துரை (60), மனைவி கோவிந்தம்மாள்(வயது 58), இவர்களது மகன் ஆனந்தன்.

தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் ஆனந்தனுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே கோவிந்தம்மாளுக்கு கை, கால்கள் செயலிழந்து போனதால் அவதிப்பட்டு வந்தார்.

தாய் மீது அதிக பாசம் வைத்திருந்ததால், ஆனந்தன் அம்மாவை நன்றாக கவனித்தும் வந்துள்ளார்.

இதனால் ஆனந்தனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடந்ததாக தெரிகிறது, இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆனந்தனின் மனைவி அவருடைய அம்மா வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் மன உளைச்சல் அடைந்த ஆனந்தன், தாய் அவதிப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

கடந்த 26ஆம் திகதி இரவு வெளியில் சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த கோவிந்தம்மாளின் கழுத்தை அறுத்து ஆனந்தன் கொலை செய்தார்.

கோவிந்தமாளின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கோவிந்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்