குடிக்கு அடிமையான நபர்கள் போதைக்காக செய்த செயல்..! பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் போதைக்காக கிருமி நாசினி குடித்து 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் குறிச்சேடு பகுதியிலே இந்த கோர சம்பவம் நடந்துள்ளது

குடிக்கு அடிமையான சிலர் ஊரடங்கின் போது மது விலை அதிகரித்ததால் போதைக்காக கிருமி நாசினி குடித்துள்ளனர்.

இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தொடர்ந்து மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்கள் சிலர் பிச்சைகாரர்கள் என கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து பிரகாசம் மாவட்ட பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்