கழுத்தில் இருந்த தாலியை அடகு வைத்து... குழந்தைகளுக்காக தாய் செய்த நெகிழ்ச்சி செயல்! குவியும் பாராட்டு

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பெண் ஒருவர் தாலியை அடமானம் வைத்து குழந்தைகளின் கல்விக்காக தொலைக்காட்சி வாங்கி தந்துள்ள சம்பவம் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு என்பது இன்று வரை கண்டிப்புடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் ஓரளவு தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுவதால், தனியார் பள்ளிகள் ஆன்லை வகுப்புகளை நடத்தி வருகிறது.

எல்.கே.ஜி குழந்தைகளுக்கு கூட ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட் போன் என்பது மிகவும் அவசியம், என்பதால் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

பஞ்சாப் போன்ற மாநிலங்கள், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஸ்மார்ட்போன் வழங்கி உதவி செய்து வருகின்றது. இன்னும் சில மாநிலங்களில் தொலைக்காட்சி வழியாக பிள்ளைகளுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் டிவி இல்லாத வீடுகளில் இருக்கும் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில், தொலைக்காட்சி வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்த அரசு முடிவு செய்துள்ளதால், அம்மாநிலத்தை சேர்ந்த பெண் தன்னுடைய குழந்தைகளின் படிப்பு கெட்டு போய்விடக் கூடாது என்பதற்காக தனது தாலியை அடமானம் வைத்து புதிய தொலைக்காட்சி ஒன்றை வாங்கியுள்ளார்.

கஸ்தூரி என்று அறியப்படும் அந்த பெண் இது குறித்து கூறுகையில், எங்களை தொலைக்காட்சி வாங்கும்படி ஆசிரியர்கள் வலியுறுத்தினார்.

ஆனால், எங்களிடம் அவ்வளவு பண வசதி இல்லை. தொலைக்காட்சிக்காக, குழந்தைங்களை பக்கத்து வீடுகளுக்கு அனுப்பி வெச்சிட்டு இருக்க முடியாது. இதன் காரணமாகவே தாலியை அடமானம் வைத்தேன். குழந்தைகளுக்கு படிப்பு தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்