தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவமனையில் அனுமதி

Report Print Basu in இந்தியா

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைதொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் 38 பேருக்கு பரிசோதனை செய்ததில் ஆளுநர் உதவியாளர் உட்பட 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது.

இருந்தபோதும் அவர் தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து ஆளுநர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது.

இந்நிலையில், ராஜ் பவனில் பணியாற்றும் மேலும், 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்