3 வயது குழந்தை பரிதாப மரணம்!... கேரளாவை உலுக்கும் சம்பவத்தின் முழு தகவல்கள்

Report Print Fathima Fathima in இந்தியா
763Shares

9கேரளாவில் சிகிச்சையளிக்க மறுத்ததால் மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் Aluvaவை சேர்ந்த மூன்றே வயதான சிறுவன் ப்ரித்விராஜ், நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக Coinயை விழுங்கியுள்ளான்.

இதனால் பதறிப்போன ப்ரித்விராஜின் பெற்றோர்கள், உடனடியாக அவனை தூக்கிக் கொண்டு Aluvaவில் உள்ள சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் இல்லை எனக்காரணம் காட்டி வேறொரு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.

அங்கிருந்து எர்ணாகுளத்தில் உள்ள பொது மருத்துவமனைக்கு சென்ற போது, இதே பதில் தான் வந்துள்ளது.

வாழைப்பழத்தையும், சாதத்தையும் சாப்பிட்டால் Coin மலத்தில் வெளியேறிவிடும் என அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து 70 கி.மீ தொலைவில் இருக்கும் ஆலப்புழா மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

அங்கேயும் வாழைப்பழத்தை சாப்பிடச்சொல்லி அனுமதிக்க மறுத்துள்ளனர், வேறு வழியில்லாமல் ப்ரித்விராஜை அழைத்துக் கொண்டு அவனது பெற்றோர்கள் வீட்டுக்கு வர நேற்று மாலையே அவனது உடல்நிலை மோசமாகி போன நிலையில் காலை தூக்கத்திலேயே சடலமானான்.

மகனின் நிலையை பார்த்து பெற்றோர்கள் கதறி துடித்தனர், உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சை மட்டும் அளித்திருந்தால் இது நேர்ந்திருக்காது எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

அச்சிறுவன் வசிக்கும் பகுதியோ, Containment Zoneல் இருப்பதால் சிகிச்சை மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆலப்புழா மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், சிறுவனது குடலில் Coin இருந்தது, எனவே தான் உடனடி அறுவைசிகிச்சைக்கு தேவைப்படவில்லை.

ஒருவேளை சுவாச பாதையில் சிக்கியிருந்தால் உடனடியாக அறுவைசிகிச்சை செய்து அகற்றியிருப்போம்.

குடல் என்பதாலேயே வாழைப்பழமும், தண்ணீரும் நிறைய அருந்த பரிந்துரைக்கப்பட்டது, இதில் மலத்தின் வழியே Coin வெளியேறியிருக்ககூடும் என கருதியதால் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை வீட்டிற்கு சென்றதும் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்தால் மட்டும் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் எனவும் விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி மூன்று வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்