மாமனார், மாமியார் கனவில் வந்து என்னை அழைத்தனர்! 6 வயது மகளின் கழுத்தை அறுத்து கொன்ற தாய் பகீர்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் ஆறு வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் அதற்கான காரணத்தை தெரிவித்தது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருவண்ணாமலையை அடுத்த கீழ்சிறுபாக்கத்தைச் சேர்ந்த கலையரசன், மனைவி சுகன்யாவிடம் கோழிக்கறி குழம்பு வைக்க சொல்லிவிட்டு நிலத்திற்கு சென்று வாழையிலை அறுத்து கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

வீட்டுக்கு பின்புறம் உள்ள கழிவறையில் மனைவியும், மகளும் கழுத்தறுபட்ட நிலையில் துடித்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் சென்று பார்த்த பொழுது 6 வயது மகள் நிவேதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு துடித்து கொண்டிருந்த சுகன்யா திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும், ஓராண்டுக்கு முன்னர் உயிரிழந்த மாமனார்- மாமியார் தங்களிடம் வந்துவிடுமாறு தொடர்ந்து கனவில் அழைத்து வந்ததால், மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக சுகன்யா பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்