காதலன் வீட்டிற்கு சென்று உல்லாசம்! கையும் களவுமாக கணவனிடம் பிடித்து கொடுத்த மக்கள்: அதன் பின் நடந்த சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஊராட்சி தலைவருடன் தனிமையில் இருந்த திருமண பெண்ணை, ஊர் கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் சொக்கநாதன்புத்தூர் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் வித்யா. இதே கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக கண்ணன் என்பவர் உள்ளார்.

இருவரும் அரசு அதிகாரிகள், ஒரே கிராமம் தொடர்பாக வேலையில் இருப்பதால், இருவரும் முதலில் அறிமுகமாகியுள்ளனர்.

முதலில் நண்பர்களாக இருந்த இவர்களின் பழக்கம், நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு சென்றுவிட்டது. இதன் காரணமாக இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.

அதன் படி கண்ணன் வீட்டிற்கு வித்யா அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதைப் அப்பகுதி மக்கள் பார்த்து சந்தேகம் அடைந்துள்ளனர்.

அதன் பின் இருவரும் இப்படி ஒரு உறவில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து, இருவரையும் கையும், களவுமாக பிடிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்துள்ளனர்.

அதன் படி சம்பவ தினத்தன்று கண்ணனின் வீட்டிற்கு திவ்யா வந்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனால் கொந்தளித்த கிராம மக்கள், உடனடியாக இது குறித்து திவ்யாவின் கணவருக்கு முதலில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர் வந்த பின்பு, வித்யா கணவருடன் ஊர் மக்களும் சேர்ந்து வந்து, கண்ணன் வீட்டினை பூட்டி சிறைபிடித்ததால், அப்பகுதியில் மக்கள் கூடினர்.

இதனால் உடனடியாக கண்ணன் வீட்டிற்கு பொலிசார் விரைந்து வந்தனர். அப்போது வித்யாவையும், கண்னனையும், கிராம மக்களிடம் இருந்து மீட்ட பொலிசார், துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்