கல்லறையில் 2 மணி நேரமாக கிடந்த இளம் பெண் சடலம்! புதைக்கவிடாமல் தடுத்த கிராம மக்கள்: பரிதாப சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் செவிலியரின் உடலை அடக்கம் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், உறவினர்கள் கல்லறையில் அவரின் சடலத்தை வைத்து தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தமிழகத்தின் சென்னை உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ராணிப்பேட்டையை சேர்ந்த செவிலியர் அர்ச்சனா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் எற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரின் சொந்த ஊரடான நாவல்பூரில் உள்ள கல்லறை தோட்டத்தில், உடலை புதைப்பதற்காக உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

அதன் படி அவரின் சடலத்தை கொண்டு வந்தனர். ஆனால் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை எங்கள் பகுதியில் புதைக்கவிட மாட்டோம் என்று, அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திடீரென்று தகராறில் ஈடுபட்டனர்.

இது குறித்து தவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனால் உயிரிழந்த அர்ச்சனாவின் சடலத்தை கல்லறை அருகே வைத்து கொண்டு உறவினர்கள் தவித்து வந்துள்ளனர். இப்படி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் இறுதியாக கிராம மக்கள் ஒப்புக் கொண்டதால், அதன் பின் செவிலியரின் சடலம் அங்கு புதைக்கப்பட்டது.

பொதுமக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செவிலியராக பணிபுரிந்து ஒருவரின் உடலை அந்த கிராமத்து மக்களே அடக்கம் செய்யவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்