அதிகாலை திடீரென பயங்கரமாக தீப்பிடித்து எரிந்த மருத்துவமனை... 8 கொரோனா நோயாளிகள் பரிதாப பலி!

Report Print Basu in இந்தியா

குஜராத்தின் அகமதாபாத்தில் வியாழக்கிழமை அதிகாலை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகாலை 3 மணியளவில் அகமதாபாத்தின் நவரங்க்புரா பகுதியில் உள்ள ஷ்ரே மருத்துவமனையிலே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மின்னழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து எட்டு தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் தீயணைப்பு துறையின் 10 ஆம்புலன்ஸ்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டன.

இந்த விபத்தில் ஐ.சி.யூ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்து ஐந்து ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் இறந்தனர்.

50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் விபத்து நடந்த நேரத்தில் சுமார் 45 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

உயிரிழந்த 8 கொரோனா நோயாளிகளை தவிர மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டு நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தனது சொந்த மாநிலத்தில் நடந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ .2 லட்சம் வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ .50,000 வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்