இலங்கை தாதா கொலையில் அதிரடி திருப்பம்! சினிமாவில் நடிப்பதாக கூறி முக அறுவை சிகிச்சையில் உருவம் மாறியது அம்பலம்

Report Print Raju Raju in இந்தியா

இலங்கை தாதா அங்கொட லொக்கா கொலையில் அதிரடி திருப்பமாக அவருக்கு முக அறுவை சிகிச்சை செய்து உருவத்தை மாற்றியது அம்பலமாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி, (36). இவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங் (35) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என, பீளமேடு பொலிசாரிடம் புகார் செய்தார்.

இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையை வழங்கினார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் பிரேதப்பரிசோதனைக்கு பின் சடலத்தை ஒப்படைத்தனர். சிவகாமி சுந்தரி மற்றும் உயிரிழந்தவருடன் தங்கியிருந்த இலங்கை கொழும்பை சேர்ந்த அமானி தான்ஜி, (27) இருவரும் சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கு குறித்து சந்தேகமடைந்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தவரின் உண்மையான பெயர், அங்கொட லொக்கா எனத் தெரிந்தது. இவர், இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர், பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

லொக்கா தனது காதலி அமானி தான்ஜியுடன் கோவை தங்கியிருந்தது தெரியவந்தது.

இந்நிலையில், அங்கொடா லொக்கா துபாய் தப்பி செல்வதற்கும், ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட ஆவணங்களை சிபிசிஐடி பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

போலி ஆவணங்கள் தயாரிக்க மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாம சுந்தரி மூளையாக செயல்பட்டுள்ளார் என்றும், போலி ஆவணங்களாக இருந்தாலும் உண்மையான முகவரியை பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் அங்கொடா லொக்கா முக அறுவை சிகிச்சை செய்து உருவத்தை மாற்றியது அம்பலமாகியுள்ளது, கோவை தனியார் மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி மூக்கை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சையை அவர் செய்து கொண்டிருக்கிறார்.

பொலிசில் தப்புவதற்காக தோற்றத்தை மாற்றிக் கொண்டு திரிந்ததாக சிபிசிஐடிபொலிசார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தாதா தொடர்பில் மேலும் பல அதிர்ச்சிகரமான விடயங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்