திருமணம் ஆன முதல் நாளில் இருந்தே கொடுமை! உடல் நிலை சரியில்லாத மகளை பார்க்க சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் உடல் நிலை சரியில்லாத மகளை பார்க்க சென்ற போது, அங்கு மகள் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் சிவி சாலையில் வசித்து வருபவர் முருகன். இவர் பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் மோகன ப்ரியா என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் நடைபெற்ற முதல் நாளில் இருந்தே, முருகனின் குடும்பத்தினர், மோகன ப்ரியாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, முருகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், மோகன் ப்ரியாவுக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக மோகனப் ப்ரியா தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார்.

அதன் பின் சமீபத்தில் சமரசம் பேசப்பட்டு, மோகனப் ப்ரியா மீண்டும் கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையத்து நேற்று மாலை மோகனப் ப்ரியாவின் பெற்றோருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட முருகனின் குடும்பத்தினர், மோகன ப்ரியாவுக்கு உடம்பு சரியில்லை என்றும், தங்கள் விரைந்து வருமாறும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பெற்றோர் அங்கு சென்று பார்த்த போது, மோகனப் ப்ரியாவின் உடலை அடக்கம் செய்வதற்கான வேலைகள் நடப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து மோகனப் ப்ரியாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில், தங்களது மகளின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், முருகனின் குடும்பத்தினர் சேர்ந்து எங்களது மகளை கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகம் ஆடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்