இந்தியாவுக்கு சமீபத்தில் வந்த போர் விமானங்கள்... தமிழருக்கு மரியாதை செய்யும் இந்திய பிரதமர் மோடி!

Report Print Santhan in இந்தியா

இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்களை வாங்க இந்திய அரசுக்கு பெரிதும் உதவிய முன்னாள் விமானப்படைத் தலைவருக்கு பிரதமர் மோடி மரியாதை செய்ய திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவர் மார்ஷல் கிருஷ்ணசாமி. முன்னாள் விமானப்படைத் தலைவரான இவர், விமானப் படையில் பணியாற்றிய போது, பிரான்சில் ரபேல் விமானத்தை ஓட்டியிருக்கிறார்.

இது இந்தியாவிற்கு மிகவும் அவசியமான போர் விமானம். இந்த விமானங்கள், இந்திய விமானப் படைக்கு வர வேண்டும் என்று ஆசைபட்டவர்.

இதற்காக ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முயற்சி எடுத்த போது, மூழு மூச்சாக ஆதரவு அளித்தார்.

இந்த விவகாரத்தில், மோடியை கடுமையாக விமர்சித்து, 2019 லோக்சபா தேர்தலில் பிரசாரமாகவே மாற்றினார், ராகுல்.

அப்போதும், ரபேல் விமானங்கள் இந்திய விமானப் படைக்கு தேவை என உறுதியாக சொன்னவர், கிருஷ்ணசாமி.

சமீபத்தில் இந்தியா வந்துள்ள, ஐந்து ரபேல் விமானங்கள், விரைவில் விமானப் படையில் சேர்க்கப்பட உள்ளன.

இதை ஒரு விழாவாக கொண்டாட மோடி ஏற்பாடு செய்துள்ளார். இந்த விழாவில், ரபேல் விமானங்களை வாங்க முழு ஆதரவு அளித்த, ஏர் மார்ஷல் கிருஷ்ணசாமியை அழைத்து மரியாதை செய்யவும், பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, நீங்கள் அவசியம் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என, கிருஷ்ணசாமியை போனில் கேட்டுக் கொண்டுள்ளார் மோடி, இம்மாத இறுதியில், இந்த விழா,ஹரியானாவின் அம்பாலா நகரில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்