மூக்கு அறுவை சிகிச்சை செய்து தோற்றம் மாறிய பின்னர் இலங்கை தாதா எப்படியிருந்தார்? வெளியானது புகைப்படங்கள்

Report Print Raju Raju in இந்தியா

இலங்கை தாதா அங்கொட லொக்கா சினிமாவில் நடிக்க போவதாக கூறி மூக்கை பெரியதாக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி (36).

இவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங் (35) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என, பீளமேடு பொலிசாரிடம் புகார் செய்தார்.

இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையை வழங்கினார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் பிரேதப்பரிசோதனைக்கு பின் சடலத்தை ஒப்படைத்தனர். சிவகாமி சுந்தரி மற்றும் உயிரிழந்தவருடன் தங்கியிருந்த இலங்கை கொழும்பை சேர்ந்த அமானி தான்ஜி, (27) இருவரும் சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கு குறித்து சந்தேகமடைந்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தவரின் உண்மையான பெயர், அங்கொட லொக்கா எனத் தெரிந்தது. இவர், இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர், பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.

பொலிசாரிடம் சிக்காமல் இருக்க லொக்கா, சினிமாவில் நடிக்க போவதாக கூறி மூக்கை பெரிதாக மாற்றி கொண்டு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில் இது தொடர்பாக சிபிசிஐடி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் எடுக்கப்பட்ட அங்கொட லொக்காவின் புகைபடங்களை தனியார் மருத்துவமனையில் இருந்து சேகரித்துள்ளனர்.

தற்போது அந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவர் முகத்தில் பெரியளவில் மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்