அனுமன் கோயிலுக்கு பாதுகாப்பாக நின்ற இஸ்லாமியர்கள்- பெங்களூரு கலவரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா
345Shares

பெங்களூருவில் கலவரம் நடைபெற்ற நள்ளிரவில் அனுமன் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் அரணாக நின்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பேஸ்புக்கில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் விதமாக நபர் ஒருவர் வெளியிட்ட பதிவால் வன்முறை வெடித்தது.

பொலிஸ் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டதுடன், பொலிசார் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

இதையடுத்து, இந்து கோயில்களுக்கு பொலிஸ் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், ஷாம்புரா சாலையில் உள்ள அனுமன் கோயிலை சுற்றி, நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் நள்ளிரவு நேரத்தில் மனிதச் சங்கிலி முறையில் கைக்கோர்த்து அரணாக நின்றனர்.

உரிய நேரத்தில் கோயிலுக்கு பாதுகாப்பு அளித்ததால் அங்கு நடைபெறவிருந்த வன்முறை தடுக்கப்பட்டது, இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்