மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! இளைஞனின் மோசமான செயல்

Report Print Santhan in இந்தியா
37407Shares

தமிழகத்தில் மனைவியோடு இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் கணவன் பதிவிட்ட நிலையில், அந்த புகைப்படத்தை வைத்து இளைஞன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க கணவர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்நிலையில், அவர் மனைவியின் புகைப்படத்தை மட்டும் தவறாக சித்தரித்து, மார்பிங் செய்து வேறொரு பேஸ்புக் பக்கத்தில் சிலர் பதிவு செய்துள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த கணவர் உடனடியாக அந்த பேஸ்புக்கின் அட்மினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதையடுத்து அந்த புகைப்படம் உடனடியாக நீக்கப்பட்டு, மற்றொரு பேஸ்புக் பக்கத்தில் இருப்பதைக் கண்டுள்ளார்.

இதனால் அவர் உடனடியாக இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்போவதாக கூற, உடனே அந்த நபர்கள் கூலிப்படையை ஏவி கொலை செய்துவிடுவோம் என்றும், மனைவியை ஆபாசமாக படம் எடுத்து அனுப்பாவிட்டால் இன்னும் சில படங்களை மார்பிங் செய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

அதன் பின் அவர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, பொலிசார் குறித்து பேஸ்புக்கின் பக்கத்தை ஆய்வு செய்தனர்.

அதில் மயிலாடுதுறையை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க சிவா என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

சிவா

அப்போது, சிவா ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் என்பதும், மயிலாடுதுறை பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்த அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனதும் தெரியவந்தது.

இப்படி முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ள பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து தவறாக சித்தரித்து தனது போலியான பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்புகொண்டு மிரட்டுவதை சிவா வழக்கமாக கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும் இது போன்று வேறு யாரிடமும் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து அறிவதற்காக சிவாவிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்