கருப்பாக இருப்பதாக கேலி செய்த தோழிகள்! தற்கொலை செய்து கொண்ட 19 வயது மாணவி.. சிக்கிய உருக்கமான கடிதம்

Report Print Raju Raju in இந்தியா
1786Shares

இந்தியாவில் கருப்பாக இருப்பதாக தோழிகள் கேலி, கிண்டல் செய்ததால் 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் - சிந்து தம்பதி. இந்த தம்பதிக்கு ஆர்த்தி, அவானி என்று இரு மகள்கள் உள்ளனர். இதில், 19 வயது ஆர்த்தி நெடுமங்காடு அரசு கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

ஆர்த்தியின் தோழிகள் அவரை நீ கருப்பாக இருக்கிறாய் என்று அடிக்கடி கேலி பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால், மனமுடைந்த நிலையிலிருந்த ஆர்த்தி வீட்டில் யாருமில்லாத போது நேற்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சகோதரி அவானிதான் ஆர்த்தி தூக்கில் தொங்குவதை முதலில் பார்த்து கத்தியுள்ளார். தொடர்ந்து , பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆர்த்தியின் உடலை பார்த்து பெற்றோர் , சகோதரி கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

தற்கொலைக்கு முன் ஆர்த்தி எழுதி வைத்த கடிதத்தில், கருப்பாக இருப்பதாக கூறி என் தோழிகள் கேலி செய்து வருகின்றனர். அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்