தேசிய அளவில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது நாம் அறிந்த ஒன்றே.
இந்த கல்விக் கொள்கையின் மூலம் குறைத்தது 5ம் வகுப்பு வரை தாய் மொழிக்கல்வியை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
5ம் வகுப்பிற்கு பின் மும்மொழிக் கொள்கையை கொண்டு வர மத்திய அரசு இந்த புதிய கல்விக்கொள்கையில் அனுமதி அளித்துள்ளது.
இதில் சமஸ்கிருதம் விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மாணவர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் மொழிகளை தெரிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எந்த மொழிகளை மும்மொழி கொள்கைக்கு அனுமதிக்கலாம் எனவும் மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை பற்றி தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரான ரங்கராஜ் பாண்டே அவர்கள் அளித்த பேட்டியை இங்கு காணலாம்,