தமிழகத்தில் ரவுடியை பிடிக்கும் முயற்சியில் சுப்பிரமணியன் என்ற பொலிஸ் அதிகாரி பரிதாபமாய் பலியானார்.
தூத்துக்குடியின் மங்கலகுறிச்சியை சேர்ந்தவர் துரைமுத்து(வயது 29), பிரபல ரவுடியான இவர் ஜாமீனில் வெளியே வந்த தலைமறைவானார்.
இந்நிலையில் தன்னுடைய கூட்டாளிகளுடன் மணக்கரை மலையடிவாரத்தில் பதுங்கி இருப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைக்கவே தனிப்படை அமைத்த அதிகாரிகள் துரைமுத்துவை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
அப்போது துரைமுத்து பொலிசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசவே, சுப்பிரமணியன்(வயது 26) தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார், வெடிகுண்டு வெடித்ததில் துரைமுத்துவும் பலியானார்.
தன் மகன் இறந்த துக்கம் தாங்காமல் கண்ணீருடன் பேட்டியளித்துள்ள சுப்பிரமணியனின் தந்தை பெரியசாமி பேசுகையில்,
எங்கள் குடும்பமே விவசாய குடும்பம், சுப்பிரமணியனுக்கு சிறு வயதில் இருந்தே பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை, இதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வந்தான்.
பொலிசில் சேர்ந்ததும் முதலில் தூத்துக்குடி மாவட்ட பொலிஸ் அலுவலகத்தில் டிரைவராகவும், பின்னர் ஆழ்வார்திருநகரி பொலிஸ் நிலையத்திலும் பணியாற்றினான்.
அவன் கடைசியாக 2-வது அண்ணன் மகனின் முடிகாணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிக்கு அங்குள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றான்.
சிறிது நேரத்திலேயே ரவுடியை பிடிக்கச் சென்று இறந்துவிட்டானே என கதறியுள்ளார்.
சுப்பிரமணியனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி 10 மாத ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.