என் புருஷனை உயிரோடு தாங்க!.. கணவரின் இறுதிச்சடங்கில் கதறிய கர்ப்பிணி மனைவி- நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Fathima Fathima in இந்தியா
3825Shares

தமிழகத்தில் ரவுடியை பிடிக்க முயன்ற போது நாட்டு வெடிகுண்டு வீசி பொலிஸ் அதிகாரி சுப்பிரமணியன் கொல்லப்பட்டார்.

சிறுவயதிலிருந்தே பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையுடன் வலம் வந்தவர் சுப்பிரமணியன்.

இதற்காக தகுந்த பயிற்சிகளை மேற்கொண்டு, தன்னுடைய ஆசைப்படி பொலிஸ் அதிகாரியாகவும் ஆனார்.

ஆனால் துரதிஷ்டவசமாக ரவுடியை பிடிக்க முயன்ற போது, ரவுடி நாட்டு வெடிகுண்டை வீசியதால் பரிதாபமாய் பலியானார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சுப்பிரமணிக்கு திருமணமாகி 10 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது.

தற்போது அவரது மனைவி 3 மாத கர்ப்பிணியாகவும் இருக்கிறாராம், நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட சுப்பிரமணியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கு நிகழ்விற்கு வந்த டிஜிபி திரிபாதி, கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் எம்.எல்.ஏ. சண்முகநாதனிடம் அழுதார் சுப்பிரமணியனின் மனைவி.

என் கணவரை உயிருடன் தாருங்கள், எனக்கு அவர் தான் வேண்டும் என கதறியது பார்ப்போரின் கண்களை குளமாக்கின.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்