உடல் முழுவதும் மண்ணெண்ணெய்! குளியலறைக்கு குளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: எச்சரிக்கை செய்தி

Report Print Santhan in இந்தியா
2144Shares

தமிழகத்தில் உடல் எல்லாம் மண்ணெண்ணய் கொட்டிவிட்டது என்று குளியலறைக்கு குளிக்க சென்ற பெண், உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோவில்மேட்டை சேர்ந்தவர் குணசேகரன். 65 வயதாகும் இவர் தோட்ட தொழிலாளர்கள் நல வங்கியில் பணியாற்ற்றி ஓய்வு பெற்றவர்.

இவருடைய மனைவியான யுவராணி ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிக்கு ஒரே ஒரு மகளாக ரெனி ஷெர்சியா என்ற 18 வயது மகள் இருந்தார்.

இவர் கோயமுத்தூரில் இருக்கும் கல்லூரியில் மருத்துவம் தொடர்பாக 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், ஷெர்சியா வீட்டிற்கு வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று வீட்டின் ஷெல்ப்பில் இருந்த மண்ணெண்ணெய் கேனை ஷெர்சியா எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென்று அந்த மண்ணெண்ணெய் அவர் மீது கொட்டியதால், உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஆகிவிட்டது.

இதனால் உடனடியாக குளிப்பதற்கு குளியலறைக்கு சென்றுள்ளார். இரவு நேரம் என்பதால், குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் ஸ்விட்சை ஆன் செய்துள்ளார்.

அப்போது எதிர்பாதவிதமாக சுவிட்சில் இருந்து தீப்பொறி வெடித்தது. அந்த தீப்பொறி அப்படியே ஷெர்சியா மீது விழுந்ததால், மண்ணெண்ணெய் காரணமாக உடல் முழுவதிலும் தீப்பிடித்துவிட்டது.

இதன் காரணமாக வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடிக்க, மகளின் சத்தத்தைக் கேட்டு பெற்றோர் ஓடி வந்த பெற்றோர், தீயை அணைத்து, அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

தீவிர சிகிச்சை அளித்த போதும், 90 சதவீத தீக்காயம் இருந்ததால், அவரின் உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குணசேகரன்-யுவராணி தம்பதிக்கு பல ஆண்டுகளாகவே குழந்தை இல்லை, இதனால் ஷெர்சியாவை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்