கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த 23 வயது மகள்! முறையற்ற பழக்கத்தால் பரிதாபமாக போன உயிர்கள்

Report Print Santhan in இந்தியா
43803Shares

தமிழகத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு நாய்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். இவருக்கு சொந்தமான குடியிருப்பில் சாந்தி என்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் வாடகைக்கு தங்கி வந்துள்ளார்.

சாந்தியின் கணவர் இறந்து விட்ட நிலையில், இவருக்கு துளசி தேவி(23) என்ற மகள் உள்ளார். துளசி தேவிக்கு 2 வயதில் மற்றும் 8 மாத பெண் குழந்தைகள் உள்ளனர்.

சாந்தி இரண்டு நாய்களையும் வளர்த்து வந்துள்ளார். சாந்தி வீட்டில், எப்போதும் குழந்தைகள் அழும் சத்தமும், நாய் குரைக்கும் சத்தமும் கேட்டு கொண்டே இருக்கும்.

ஆனால், நேற்று முன்தினம் மாலையில் இருந்து, எந்த சத்தமும் இல்லை. வீட்டிற்குள் இருந்து யாரும் வெளியே வரவில்லை.

சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை, வீட்டு உரிமையாளர் வந்து பார்த்தபோது, சாந்தி துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன் பின் இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் விரைந்து வந்து பார்த்த போது, துளசிதேவி மற்றும் இரண்டு குழந்தைகளும், அருகில் வளர்ப்பு நாய்களும் இறந்து கிடந்துள்ளன.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மன்னார்குடியில், சாந்தி கணவருடன் வசித்து வந்தார். இவரது மகள் துளசிதேவி, சில ஆண்டுகளுக்கு முன், காதல் திருமணம் செய்து கொண்டார்.

ஒரு ஆண்டுக்கு முன், சாந்தியின் கணவர் இறந்து விட்டார். இதற்கிடையில், துளசிதேவியும், கணவரை பிரிந்து, இரு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்து விட்டார். கடந்த ஜனவரி மாதம், பட்டுக்கோட்டைக்கு சாந்தி வந்துள்ளார்.

துளசிதேவி, துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். துளசிதேவிக்கு, சில இளைஞர்களுடன் தவறான உறவு இருந்த நிலையில், சாந்தியும் துணை போனதாக தெரிகிறது.

இதையறிந்த, வெளிநாட்டில் இருந்த துளசிதேவியின் சகோதரர்கள் செய்து வந்த பண உதவியை நிறுத்தினர். தற்போது, ஊரடங்கால் வேலை இல்லாமல் போக, வறுமையின் காரணமாக, குழந்தைகள், நாய்களுக்கு விஷம் கொடுத்து, தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்