பல மாதங்களாக துஸ்பிரயோகம்... கர்ப்பமான 14 வயது சிறுமி: ஆசிரியர்களால் அம்பலமான கொடூரம்

Report Print Arbin Arbin in இந்தியா
2294Shares

இந்தியவின் கேரள மாநிலத்தில் 14 வயது சிறுமியை கூட்டு வன்கொடுமைக்கு இரையாக்கிய வழக்கில் மூவர் கைதாகியுள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர் அடிக்கடி சோர்வுடனே காணப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் மாணவியுடன் தனிப்பட்ட ஆலோசனை வழங்குதல் அமர்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

உரிய நிபுணருடன் முன்னெடுக்கப்பட்ட இந்த அமர்வில் மாணவி வெளியிட்ட தகவல்கள் ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன்,

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் வெளிமாநில இளைஞர்கள் மூவர் கைதானியுள்ளதுடன், மூவர் தலைமறைவாகியும் உள்ளனர்.

தாயார் மறைவுக்கு பின்னர் சிறுமி உறவினர் ஒருவர் குடும்பத்தின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

குடியிருப்பில் சிறுமி தனியாக இருக்கும் வேளைகளில், அண்டை வீட்டில் குடியிருந்து வந்த வெளிமாநில இளைஞர்கள் சிறுமியுடன் நட்பாக பழகியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் இதேப்போன்று, குடியிருப்பில் எவரும் இல்லாத நிலையில், சிறுமியை மிரட்டி துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.

மட்டுமின்றி, நகரின் பல பகுதிக்கு சிறுமையை மிரட்டி அழைத்துச் சென்றும் பலருக்கும் விருந்தாக்கியுள்ளனர்.

இதனிடையே, சிறுமி கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்டதை கவனித்த ஆசிரியர்கள் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே இந்த கொடூரம் அம்பலமானது.

இதனையடுத்து ஆசிரியர்கள் பொலிசாருக்கு புகார் அளித்ததுடன் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தியுள்ளனர்.

இதில் சிறுமி ஒன்றரை மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பில் மாயமான மேலும் மூவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்