இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இது கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த தர்மதாஸ் (62) அவர் மனைவி சோனி (62) மகன் மனோகர் (27) மருமகள் சோனம் (25) மற்றும் பேரன் சஹித்யா (4) ஆகிய ஐந்து பேரும் இரு தினங்களுக்கு முன்னர் தங்கள் வீட்டில் இருந்த இரண்டு அறைகளில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளனர்.
காலையில் வீட்டுக்கு பால்காரன் வந்து பார்த்த போது அவர்கள் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஐவரின் சடலங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சோனம் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளதையும் மனோகர் மார்பில் இரத்தம் இருந்ததையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.
பொலிசார் கூறுகையில், நிலம் ஒன்றை விற்பது தொடர்பாக குடும்பத்தினர் இடையே சில தினங்களாக சண்டை ஏற்பட்டுள்ளது.
இதோடு வேலையில்லாமல் மனோகர் இருந்தது தொடர்பாகவும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
மனோகர், சோனம் உடல்களில் உள்ள காயங்களை வைத்து இது கொலையாக இருக்கலாம் குடும்பத்தார் கூறுகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இது தொடர்பிலான உண்மை வெளிவரும், தொடர்ந்து பலரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.