இந்தியாவில் திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் சரீஷ். இவருக்கும் அனகா என்ற 24 வயது இளம்பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
சரீஷும், அனிகாவும் பெங்களூரில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சரீஷ் உணவு வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.
பின்னர் வீடு திரும்பிய போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து கதவை உடைத்து கொண்டு உள்ளே போன போது அனகா தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு வந்து சடலத்தை மீட்டனர்.
மேலும் அனகா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.