S.P.B-க்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சற்று முன் வெளியிட்டுள்ள அறிக்கை!

Report Print Santhan in இந்தியா

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வென்டிலேட்டர், எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5-ஆம் திகதி கொரோனா வைரஸ் காரணமாக, சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை திடீரென்று கவலைக்கிடமானதால், அவரது உடல்நிலை குறித்து தினந்தோறும் மகன் சரண் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்து வருகிறது.

கடந்த சில தினங்களாகவே அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், பிஸியோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து நினைவுடன் உள்ளார். எக்மோ, வென்டிலேட்டர் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தவிர, பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

அவரின் உடல் நிலை தொடர்ந்து சீராகி வருவதால், அவரின் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்