திருமணமான 3 மாதத்தில் வலியால் அலறியபடி சாலையில் ஓடி வந்த புதுப்பெண்! கிராம மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மருமகளை மாமியார் மற்றும் மாமனார் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முலாயம் சிங். இவருக்கும் விம்லேஷ் குமாரி என்ற 22 வயது பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது குமாரியின் பெற்றோர் மாப்பிள்ளைக்கு வரதட்சணை கொடுத்தனர்.

ஆனாலும் திருமணத்துக்கு பின்னர் தங்க செயின் மற்றும் பைக் வரதட்சணையாக வேண்டும் என கூறி முலாயம் மற்றும் அவர் பெற்றோர் குமாரியை கொடுமைபடுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் குமாரியை அடித்து உதைத்த குடும்பத்தார் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தனர்.

இதையடுத்து வலியால் அலறியபடி குமாரி சாலையில் ஓடி வந்தார்.

இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் நிலைமையை உணர்ந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமாரி உயிரிழந்தார். இது குறித்து குமாரியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்