என் சாவுக்கு மனைவி தான் காரணம்! தற்கொலைக்கு முன் கணவன் எழுதி வைத்திருந்த கடிதத்தில் இருந்த பகீர் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் டிக்டாக் மூலம் மனைவி இரண்டு பேருடன் நெருங்கிய பழகியதால், வேதனையடைந்த கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பொம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருக்கு கனகவள்ளி என்ற மனைவி உள்ளார்.

கனகவள்ளி பொழுது போக்கிற்காக ஆரம்பத்தில் டிக் டாக்கை பயன்படுத்தி வந்துள்ளார். அதன் பின்னர் அதிலே மூழ்கி போயுள்ளார்.

அதன் மூலம் டிக் டாக்கில் நண்பர்கள் பலர் கனகவள்ளிக்கு கிடைத்துள்ளனர். அப்படி தான் அருண்குமார் மற்றும் பனியன் கம்பெனி உரிமையாளர் ஆகியோரின் நட்பு கிடைத்துள்ளது.

இவர்கள் இரண்டு பேரிடம் நாட்கள் செல்ல, செல்ல கனகவள்ளி நெருங்கி பழகி வந்துள்ளார். இதை அறிந்த ரவி, மனைவியை கண்டித்துள்ளார்.

ஆனால் கனகவள்ளி, கணவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் கனகவள்ளி கணவனைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதை அருண்குமார் மற்றும் பனியன் கம்பெனி உரிமையாளர் சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்

இதை அறிந்து மனவேதனையடைந்த ரவி, தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார். அதன் படி தன்னுடைய இறப்பிற்கு அருண்குமார் மற்றும் பனியன் கம்பெனி உரிமையாளர் ஆகியோர் தான் காரணம் என கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்