வசந்தகுமாரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்! இன்று இறுதிச்சடங்கு: அஞ்சலி செலுத்த குவியும் மக்கள்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் உயிரிழந்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி வசந்தகுமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கடந்த 10-ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் எம்.பி.க்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், அதே நேரத்தில் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதன் பின் கடந்த 28-ஆம் திகதி மாலை அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரின் உடல் சென்னை தியாகராய நகரில் வைக்கப்பட்டு, நேற்று பிற்பகல் சொந்த ஊரான கன்னியாகுமரியின் அகஸ்தீஸ்வரத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரின் உடல் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இரவு சொந்த ஊரை அடைந்தது.

இங்கு காங்கிரஸ் நிர்வாகிகள், பொது மக்கள், சொந்த ஊரை சேர்ந்த உறவினர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்