2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி யாருடன் கூட்டணி? தெளிவுப்படுத்திய சீமான்

Report Print Basu in இந்தியா

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெளிவுப்படுத்தியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான அஇஅதிமுக மற்றும் திமுக கூட்டணியில் எந்த கட்சிகள் இடம்பெறும் அல்லது தனித்து போட்டியிடுமா என்ற கேள்விகளும் எழ தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் கூட்டணி இல்லாமல் தனியாக நின்ற நாம் தமிழர் கட்சி 2021 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெளிவுப்படுத்தியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய சீமான், இந்த தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தலிலும் கூட்டணி கிடையாது. நான் முழுமையாக மக்களை நம்புறேன். அவர்கள் தான் என்னுடைய வலிமையான கூட்டணி என தெளிவுப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்