அப்பச்சி... தம்பி என கதறி அழுத மக்கள்! வசந்தகுமார் இறுதி அஞ்சலியின் கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்

Report Print Santhan in இந்தியா

மறைந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் இறுதி அஞ்சலியின் போது, மக்கள் அப்பச்சி...அப்பச்சி என்று அவர் செய்த உதவியை நினைத்து முழுக்கமிட்டது அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி தொகுதி எம்.பியான வசந்தகுமார் (70) கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 28-ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பின் அவர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லைத்தில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அப்போது, காங்கிரஸார், மற்றும் பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திற்கு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கொண்டு வரப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் வீட்டின் முன்பு வசந்தகுமாரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு வீட்டின் முன்பு காத்து நின்ற மக்கள், நள்ளிரவில் இருந்தே விடிய விடிய வசந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அகஸ்தீஸ்வரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள், குமரி மாவட்டத்தின் பிற பகுதியை சேர்ந்த மக்கள் வரிசையில் காத்து நின்று விடியற்காலை வரை அஞ்சலி செலுத்தினர்.

கொரோனா ஊரடங்கு என்பதால் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அஞ்சலி செலுத்த வந்த மக்களை காவல்துறையினர் ஒழுங்குபடுத்தினர்.

வசந்தகுமாரின் உடல் அருகே அவரது மனைவி தமிழ்செல்வி, மகள் தங்கமலர், மகன்கள் விஜய் வசந்த், வினோத்குமார் ஆகியோர் சோகத்துடன் அழுதவாறு இருந்தனர்.

அப்போது அவர்கள் துக்கம் தாளாமல் கண்ணீர்விட்டு அழுதனர். கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் அகஸ்தீஸ்வரம் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் என ஏராளானோர் வந்து வசந்தகுமாரின் உடல் அடக்கம் முடியும் வரை இருந்து, பின்னர் சோகத்துடன் திரும்பி சென்றனர்.

வசந்தகுமாரின் உடல் அகஸ்தீஸ்வரத்தில் அவரது வீட்டில் இருந்து அடக்கம் செய்யும் தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்து வந்தபோது, வாகனத்தை பின்தொடர்ந்து வந்த மக்கள் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுததை காண முடிந்தது.

இறுதி அஞ்சலியில் பங்கேற்ற முதியவர்கள், பெண்கள் திரண்டு வசந்தகுமார் செய்த உதவிகளை நினைவு கூர்ந்து ஆவேசமாக கோஷம் எழுப்பினர்.

அப்போது வீரவணக்கம் அப்பச்சி தம்பிக்கு வீரவணக்கம் என்ற கோஷத்தைத் தொடர்ந்து ஒலித்தவாறு வந்தனர். ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு கல்லறை தோட்டம் வரும் வரை இந்த கோஷத்தை எழுப்பியவாறு வந்தனர். காமராஜரை அப்பச்சி என்றே கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அழைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்