அதிகாலையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! திருமணமான 50 நாளில் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற புதுபெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்தவர் அருள்ராஜ் (30). இவரது மனைவி கிறிஸ்டி கெலன் ராணி (26). இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை மாதம் ஆகிறது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க ராணி அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதிக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கண்டு அவரது வீட்டார் தேடிச் சென்றனர்.

அப்போது அங்குள்ள ஆற்றங்கரையோரத்தில் சடலமாக பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த தாலி மோதிரம் என 7 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நாயானது அங்கிருந்து மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது.

யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்