வெறும் கனவுகளுடன் வந்தவர்... இன்று உன்னத மனிதராக: வசந்தகுமாருக்கு புகழஞ்சலி

Report Print Arbin Arbin in இந்தியா

கொரோனா காரணமாக மரணமடைந்த பிரபல தொழிலதிபரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமாருக்கு அவரது மகன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சென்னையில் கொரோனா பாதிப்புக்கு இலக்காகி சிகிச்சையில் இருந்துவந்த தொழிலதிபரும் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது உடல், சொந்த கிராமத்தில் பெற்றோரின் கல்லறைக்கு சமீபமே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமது தந்தை தொடர்பில் சமூக ஊடகத்தில் நன்றி தெரிவித்த விஜய் வசந்த்,

1970 காலகட்டத்தில் வெறும் கனவுகளுடன் சென்னைக்கு வந்தார் எனவும்,

ஆனால் 50 ஆண்டுகளுக்கு பின்னர் தனது கனவுகளை அனைத்தையும் நிறைவேற்றிய ஒரு உன்னத மனிதராக அவர் வேர்பிரிந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த தருணத்தில் தமது தந்தையை நினைவுகூர்ந்த அனைவருக்கும் நன்றி எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்