கணவன் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து வேறு ஆணுடன் வெளிநாடு சென்ற மனைவி! ஊர் திரும்பிய போது கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவர் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து வேறு ஆணுடன் அவிஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற மனைவி ஊர் திரும்பிய நிலையில் வசமாக சிக்கியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் பிலிபிட்டைச் சேர்ந்த 36 வயது நபர், கடந்த ஜனவரி 6 ஆம் திகதி தனது ஏற்கனவே வேறு நபரை திருமணம் செய்த தனது ரகசிய காதலியுடன், அவரது கணவரின் பெயரில் பாஸ்போர்ட் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இருவரும் மார்ச் மாதத்தில் சொந்த திரும்ப நினைத்த போது கொரோனா பரவல் காரணமாக இந்தியா செல்லும் அனைத்து சர்வதேச பயணிகள் விமானங்களும் இடைநிறுத்தப்பட்டதால் அவர்கள் அங்கேயே சிக்கி கொண்டனர். இதையடுத்து கடந்த மாதம் 24ஆம் திகதி விமானத்தின் மூலம் ஊர் திரும்பினார்கள்.

அவர்கள் திரும்பி வந்த பின்னர் மும்பையில் பணிபுரியும் பெண்ணின் கணவர் தன் பாஸ்போர்டில் தனக்கு பதிலாக வேறு நபர் சென்றதை கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து நேரடியாக காவல் நிலைத்திற்கு சென்று புகார் அளித்த அவர், தனது மனைவியுடன் தவறான உறவில் உள்ள நபர் கள்ள பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்றதாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ந்த பொலிசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். விசாணையில் கணவர் கூறும் போது. நான் கடந்த 20 ஆண்டுகளாக மும்பையில் பணிபுரிந்து வருகிறேன். எப்போதாவது ஒரு முறை என் மனைவியை பார்க்க வருவேன்.

கடந்த மே 18 அன்று நான் பிலிபித்துக்குத் திரும்பியபோது, ​​என் மனைவி வீட்டில் இல்லை. இருவரும் அவுஸ்திரேலியா சென்றிருப்பதை அறிந்தேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து புகார் கூறிய நபரின் பெயரில் பாஸ்போர்ட் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்