5 ஆண்களை திருமணம் செய்துவிட்டு 22-வயது இளைஞருடன் ஓட்டம் பிடித்த 38 வயது பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஐந்து கணவன்களை உதறிவிட்டு 6-வது கணவருடன் காவல்நிலையத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரூ மாவட்டத்திலுள்ள கச்சினஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு(22). இவர் 38 வயது பெண் ஒருவருடன் அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று, நானு இந்த பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

எங்களின் திருமணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கொலை மிரட்டல் விடுங்கின்றனர். இதனால் எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறி புகார் கொடுத்திருந்தனர்.

இதையடுத்து சந்துரு அழைத்து வந்த 38 பெண்ணை தேடி காவல்நிலையத்திற்கு திடீரென 5 ஆண்கள் தேடி வந்தனர். அவர்கள் அனைவரும், அந்த பெண்ணை இவள் என்னுடைய மனைவி, என்னுடன் அனுப்பு வையுங்கள் என்று கூறி வந்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த, பொலிசார் அந்த பெண் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த பெண்ணின் பெயர் பிரியா என்பதும், அவர் ஏற்கனவே 5 பேரை திருமணம் செய்தவர் என்பதும் அவர்களுடன் 2 குழந்தைகளும் பிறந்திருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.

அவர் இப்போது, நான் சந்துரு (22) வை காதலிக்கிறேன். நான் சந்துருவுடன் வாழ விரும்புகிறேன் என பொலிசாரிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதனால் பொலிசார் சந்திருவிடன், நீ சின்னப் பையன் உனக்கு விவகாரம் வேண்டாம், விலகி விடு என்று கூற, அவர் பொலிசாரின் பேச்சை சிறிதும் பொருட்படுத்தாமல், எனக்கு அந்த பெண் தான் வேண்டும் என்று எத்தனை திருமணம் ஆகியிருந்தாலும் பரவியில்லை அவர் தான் வேண்டும் என்று கூற, பொலிசார் சந்துருவின் அக்காவை அழைத்து விஷயத்தை கூறியுள்ளனர்.

ஏனெனில், சந்துருவுக்கு அம்மா-அப்பா இல்லை என்பதால், அக்காவிற்கு போன் செய்து சொல்லியுள்ளனர்.

அவர் காவல்நிலையத்திற்கு வந்து எவ்வளவோ சொல்லியும் கேட்காததால், வேறு வழியின்றி பொலிசார், அப்பெண் மீது ஏற்கனவே 5 பேரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து வாங்காமல் 6 ஆவதாக திருமணம் செய்திருக்கிறார் என வழக்குத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்