கடைசிவரை நிறைவேறாமல் போன பிரணாப் முகர்ஜியின் ஆசை

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி இன்று மாலை காலமானார்.

இளம் அரசியல் தலைவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடமே என்றால் அது மிகையாகாது, அந்தளவுக்கு அரசியல் வாழ்வில் உச்சம் தொட்டவர்.

ஆனால் இவருக்கு இருந்த ஒரே வருத்தம் பிரதமராக முடியவில்லை என்பது தான், இதை அவரது மகளான ஷர்மிஷ்தாவும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

1984 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் பிரதமர் பதவிக்கு பிரணாப்பின் பெயர் பரிசீலிக்கப்பட்டாலும் நிறைவேறாமல் போனது.

துமட்டுமின்றி கட்சியின் மூத்த தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியில் ஒருபோதும் இதை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

பிரதமர் பதவிக்கு வருவதில் காங்கிரஸ் கட்சியில் பல குழுக்களுக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை என்றாலும், காந்தி குடும்பத்தின் விசுவாசியாக இல்லை என்ற காரணத்துக்காக அவர் புறக்கணிக்கப்பட்டார் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்