முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று இறுதிச்சடங்கு

Report Print Fathima Fathima in இந்தியா

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

கடந்த 10ம் திகதி மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டி காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரணாப் முகர்ஜி.

அப்போது அவருக்கு செய்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக கோமாவில் இருந்த பிரணாப், நேற்று காலமானார்.

அவரது மறைவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் செப்டம்பர் 6ம் திகதி வரை, ஏழு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா கால விதிமுறைகளின்படி அவருக்கு டெல்லியில் இன்று இறுதி சடங்குகள் மற்றும் இறுதி மரியாதைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்