இவ்வளவு அழகாக இருக்கும் நீ! திருமணமான முதல் நாள் இரவில் கணவனால் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. அடுத்து நடந்த கோர சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான முதல் நாள் இரவிலேயே மனைவி பற்றி கணவன் தவறாக பேசி துன்புறுத்தியதால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தின் கோவிந்தரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சந்திரலேகா. பட்டதாரியான இவருக்கும் முனைவர் பட்டம் பெற்ற பாலாஜி என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 23 ஆம் திகதி திருமணம் நடந்தது.

திருமணமான முதலிரவில் மனைவியிடம், நீ கற்புடன் தான் இருக்கிறாயா? இவ்வளவு அழகாக இருக்கும் நீ இதற்கு முன்னர் யாரையும் காதலிக்கவில்லையா? யாருடனும் உறவு வைத்துக்கொண்டதில்லையா பாலாஜி கேட்டுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத சந்திரலேகா அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் சந்திரலேகாவின் ஆண் நண்பர் ஒருவர் சந்திரலேகா வீட்டிற்கு சென்று அவருக்கும் அவரின் கணவர் பாலாஜிக்கும் திருமண வாழ்த்துகளை கூறி சந்திரலேகாவின் நற்குணங்கள் குறித்து சநதிரலேகாவின் கணவர் பாலாஜியிடம் எடுத்து கூறியுள்ளார்.

சந்திரலேகாவைப்பற்றி உயர்வாக பேசிவிட்டு சென்றபிறகு கணவன்-மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதோடு சந்திரலேகா மீது பாலாஜிக்கு சந்தேகம் அதிகமானது.

இதனால் மனமுடைந்த சந்திரலேகா சில தினங்களுக்கு முன்னர் தனது தாய் வீட்டிற்கு சென்று தன் மனதில் உள்ளதையெல்லாம் கடிதமாக எழுதி வைத்துவிட்டு உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் சந்திரலேகாவின் கணவர் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்