அரிவாளால் வெட்டு பட்டும் வழிப்பறி திருடனுடன் சண்டையிட்டு போராடி மடக்கிப்பிடித்த வீரச் சிறுமி: திகிலூட்டும் வீடியோ

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் பகுதியில் பைக்கில் வந்து செல்போனை பறித்த திருடனை 15 வயது சிறுமி போராடி மடக்கிப்பிடித்த சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஃபதேபூரி மொஹல்லாவில் வசிக்கும் குசும்குமாரி என்ற 15 வயது சிறுமியே இத்துணிச்சலான செயலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

வீடியோவில், குசும்குமாரி வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பைக்கில் இரண்டு போர் அவரை பின்தொடர்ந்துள்ளனர், பைக்கில் பின்னால் சவாரி செய்தவன் குசும்குமாரி கையைப் பிடித்து, அவரின்செல்போனை பறித்துள்ளான்.

சிறுமி திருடனின் சட்டை பிடித்து இழுக்க அவன் கையில் வைத்திருந்த அரிவாளால் கீழே விழுந்துள்ளது.

பைக்கிலிருந்து இறங்கிய திருடன், சிறுமியை சரமாரியாக தாக்கி அரிவாளை எடுத்து பைக்கில் ஏறி தப்ப முயன்றுள்ளான், எனினும், சிறுமி திருடனை தப்ப விடாமல் மீண்டும் மடக்கி பிடித்துள்ளார்.

சிறுமி பிடியிலிருந்து தப்பிக்க திருடன் அரிவாளால் கையில் வெட்டியுள்ளான். நல்லவேளை அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் திருடனை பிடிக்க ஓடி வர பைக்குடன் இருந்த நபர் தப்பிச் சென்றுள்ளான்.

எனினும், சிறுமி பிடியிலிருந்த திருடன் சிக்கியுள்ளான். அங்கிருந்தவர்கள் திருடனை பிடித்துள்ளனர். இதனையடுத்து கையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுமி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிடிப்பட்ட திருடன், பாகஸ்துரா, பஸ்தி டேனிஷ்மண்டாவில் வசிக்கும் 22 வயதான அவினாஷ் குமார் என அடையாளம் காணப்பட்டார்.

பைக்கை ஓட்டி வந்த அவினாஷின் கூட்டாளி தலைமறைவாக உள்ளார், மேலும் அவர் மீது ஐபிசியின் 389 பி மற்றும் 307 (கொலை முயற்சி) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்