சசிகலா புதிதாக கட்டிவரும் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை

Report Print Gokulan Gokulan in இந்தியா

அ.தி.மு.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவிற்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துக்களை பினாமி சட்டத்தின் கீழ் இணைத்துள்ளது வருமான வரித்துறை.

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருந்த சசிகலா பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வருமான வரித்துறையின் சென்னை பிரிவு சசிகலாவுக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்களை பினாமி சட்டத்தின் கீழ் இணைத்துள்ளது.

ஷெல் கம்பெனிகள் மூலம் சசிகலா இந்த சொத்துக்களை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறையில் உள்ள சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதில் போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அருகே வாங்கப்பட்ட நிலமும், மேலும் சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சொத்துக்களும் அடங்கும்.

இந்த சொத்துக்களை வாங்குவதற்கு ஷெல் நிறுவனத்திடம் எந்தவிதமான வருமானமும் இல்லையென்றும் விசாரணையில் இவை சசிகலாவின் பினாமி சொத்துக்கள் என கண்டறியப்ப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

தற்போது சிறையில் உள்ள சசிகலா இந்த ஆண்டின் இறுதியில் விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வருமான வரித்துறையின் விசாரணை சசிகலாவிற்கு மேலும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்