நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு: தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பேர் உடல் கருகி பலி

Report Print Fathima Fathima in இந்தியா
193Shares

தமிழகத்தில் நள்ளிரவில் நடந்த தீ விபத்தில் ஐந்து பேர் உடல்கருகி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

சேலத்தின் பெருமாள் மலை அடிவாரத்தில் நரசோதிப்பட்டி ராமசாமி நகரை சேர்ந்தவர் அன்பழகன், இவருடைய மனைவி புஷ்பா.

இவரும், இவருடைய தம்பி குடும்பத்தினரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர், வீட்டின் மாடியில் அன்பழகனின் பெற்றோர் வசித்து வந்தனர்.

நேற்று இரவு அன்பழகன், அவருடைய மனைவி புஷ்பா, கார்த்தி, அவருடைய மனைவி மகேஸ்வரி (35), இவர்களின் குழந்தைகள் சர்வேஷ்(12), முகேஷ்(10) ஆகியோர் அந்த வீட்டில் உள்ள அறைகளில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

நள்ளிரவு 1 மணியளவில் அவர்களின் வீட்டில் திடீரென தீப்பற்றி பரவியது, கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பற்றி வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

இதில் அன்பழகன் மட்டும் வெளியே வந்து தீயை அணைக்க முயன்றும் பலனில்லாமல் போகவே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த விபத்தில் மற்ற ஐந்து பேரும் உடல்கருகி பலியானார்கள், இதையடுத்து சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்களும் மற்றும் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் தீயில் கருகி உயிரிழந்த அனைவரின் உடல்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மின்கசிவு ஏற்பட்டதால் விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்த நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்